/
NFNEWSFELT
சினிமா

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘துரந்தர்’ திரையிடல் | வெடித்தது சர்ச்சை

மித மிஞ்சிய வன்முறைக் காட்சிகளுக்காக ‘ஏ’ சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம் அரசுப் பள்ளியில் திரையிடப்பட்டுள்ளது.

Newsfelt Admin9 ஜூலை, 20262 நிமிட வாசிப்பு1 பார்வைகள்
பகிர்:

கடந்த ஆண்டு இந்தியில் தயாராகி பல இந்திய மொழிகளில் வெளியான வலதுசாரித் திரைப்படம் என்று விமர்சிக்கப்பட்டது ‘துரந்தர்’ திரைப்படம். அதை, மத்தியப் பிரதேசம் மாநிலம், மையஹார் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு திரையிடப்பட்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உள்ளிட்ட பிரபல வடஇந்திய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக மோசமான வன்முறைக் காட்சிகளுக்காக ‘A’ சான்றிதழ் பெற்ற இந்த படம் வகுப்பறையில் அரசு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட LED திரையில் ஒளிபரப்பப்பட்டதாக அந்தச் செய்திகளில் அதற்கான ஆதார ஒளிப்படங்கள் மற்றும் துண்டுக் காணொளிக் காட்சிகளுடன் அப்பத்திரிகைகளின் இணைய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 31ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த நிகழ்வில், மாணவர்கள் படத்தை கவனமாக பார்த்துக் கொண்டிருப்பதும், ஒரு ஆசிரியர் அங்கு இருந்ததும் வீடியோவில் தெரிகிறது. இதனால் கிராம மக்கள் CM Helpline வழியாக புகார் அளித்துள்ளனர். “மாணவர்களின் கல்விக்காக வழங்கப்பட்ட டிஜிட்டல் திரையை அசிங்கமான, வன்முறை நிறைந்த, கல்வியற்ற உள்ளடக்கத்திற்குப் பயன்படுத்துவது குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது” என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் சலோனி சர்மா, “இது பற்றி விசாரணை நடத்தப்படும். பொறுப்பை மீறிச் செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

திரைப்படம் பற்றி

துரந்தர் திரைப்படம் ஆதித்யா தர்ரின் இயக்கிய வன்முறைக் குப்பை என தரமான விமர்சர்களால் விமர்சிக்கப்பட்டது. ரன்வீர் சிங், அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ஆர். மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 5 டிசம்பர் 2025 வெளியான இந்த படம் ரன்வீர் சிங்கின் முதல் ‘A’ சான்றிதழ் பெற்ற படமாகும். 214 நிமிடங்கள் ஓடும் இப்படம் வெளிவந்த மூன்று வாரங்களில் ₹1,000 கோடி வசூலித்து, இந்தியாவின் மிக அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. பின்னர் வெளியான துரந்தர்: தி ரிவெஞ்ச் 2026ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த படமாகத் திகழ்கிறது.


துரந்தர் விவரங்கள் | மையஹார் பள்ளி சர்ச்சை | ரன்வீர் சிங்

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்