நேரலை
/
NFNEWSFELT
செய்திகள்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பசுமை எரிசக்தி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து வளர்ச்சியில் ஹைட்ரஜன் ரயில்கள் முக்கிய பங்காற்றுமா? விழாவில் பிரதமர் என்ன பேசினார்?

Newsfelt Admin17 ஜூலை, 20262 நிமிட வாசிப்பு
பகிர்:

ஜிந்த்:


ஹரியானாவின் ஜிந்த்–சோனிபட் நகரங்களை இணைக்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த ரயில் திட்டம் இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து இலக்கை நோக்கிய முக்கிய முன்னேற்றம் என்று தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், இந்திய ரயில்வே சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மின்மயமாக்கல் பணிகளே காரணம் என்று அவர் கூறினார்.

“2014-க்கு முன்பு இந்திய ரயில்வே பெருமளவில் டீசலைச் சார்ந்திருந்தது. அப்போது இத்தகைய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டிருந்தால் ரயில்வே சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் ரயில்வே கட்டமைப்பின் சுமார் 99 சதவீதம் மின்மயமாக்கப்பட்டதால் சேவைகள் தடையின்றி தொடர்கின்றன,” என்றார்.

மேலும், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் ஹரியானாவின் ஜிந்த் மற்றும் பானிபட் பகுதிகள் இந்திய ரயில்வே வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஜிந்த் நகரத்துடனான தனது பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

பசுமை எரிசக்தி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து வளர்ச்சியில் ஹைட்ரஜன் ரயில்கள் முக்கிய பங்காற்றும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது...

தொடர்புடைய கட்டுரைகள்