உங்கள் போன் Notes குப்பைத்தொட்டி போல் உள்ளதா? இந்த AI ட்ரிக் உங்களுக்கானது!
பலருக்கு Samsung Notes ஒரு 'டிஜிட்டல் குப்பைத்தொட்டி' போலவே மாறிவிட்டது. இதற்கொரு சூப்பர் தீர்வாக வந்திருக்கிறது Google Gemini + Samsung Notes ஒருங்கிணைப்பு!

நாம் எப்போதுமே அவசரத்தில் க்ளையண்ட் மீட்டிங் விவரங்கள், அவுட்டோர் லொகேஷன் ஐடியாக்கள், பேமெண்ட் பாக்கி என அனைத்தையும் நமது போன் Notes-ல்தான் அவசரமாக டைப் செய்து வைப்போம்.
ஆனால், ஷூட் நேரத்திலோ அல்லது க்ளையண்ட் போன் செய்யும்போதோ அந்தத் தகவலைத் தேடிக் கண்டுபிடிப்பது பெரிய தலைவலியாக இருக்கும்!
பலருக்கு Samsung Notes ஒரு 'டிஜிட்டல் குப்பைத்தொட்டி' போலவே மாறிவிட்டது.
இதற்கொரு சூப்பர் தீர்வாக வந்திருக்கிறது Google Gemini + Samsung Notes ஒருங்கிணைப்பு! இது உங்களின் நோட்ஸை வெறுமனே சேமிக்கும் இடமாக இல்லாமல், உங்களுக்காக வேலை செய்யும் ஒரு 'அசிஸ்டெண்ட்' ஆக மாற்றுகிறது.
(இதை ஆன் செய்ய: உங்களின் Gemini App-ல் Settings -> Personal Intelligence -> Connected apps -> Samsung Notes (On) செய்து கொள்ளுங்கள்).
போட்டோகிராபர்களுக்கு இது எப்படிப் பயன்படும்? (3 வழிகள்)
1. டைப் செய்ய வேண்டாம், AI-யிடம் கேளுங்கள்!
உதாரணமாக, "2 நாள் அவுட்டோர் வெட்டிங் ஷூட்டிற்கு என்னென்ன கேமரா கியர்கள் (Gear checklist) தேவை என்பதை Samsung Notes-ல் சேமி" என்று Gemini-யிடம் வாய்ஸ் மூலம் கேளுங்கள்.
செக்லிஸ்ட்டோடு ஒரு நோட் ஆட்டோமேட்டிக்காகத் தயாராகிவிடும். நீங்கள் எதையும் காப்பி-பேஸ்ட் செய்யத் தேவையில்லை!
2. பெரிய மீட்டிங் நோட்ஸை சுருக்கிக் காணுதல்
ஒரு க்ளையண்டிடம் ஒரு மணி நேரம் பேசி, அவர்களின் ஆடைகள், ஈவெண்ட் நேரம், தீம் என அனைத்தையும் அரைகுறையாக Notes-ல் டைப் செய்து வைத்திருப்பீர்கள்.
அதைப் படித்துக் குழம்புவதற்குப் பதிலாக, "இந்த வெட்டிங் ஷூட் பிளானை சுருக்கிக் கொடு" என்று Gemini-யிடம் கேட்டால், முக்கியமான தகவல்களை மட்டும் அழகாகப் பிரித்துக் கொடுத்துவிடும்.
3. நொடியில் தேடி எடுக்கும் மேஜிக்!
உங்களின் 100 பழைய குறிப்புகளுக்கு மத்தியில், "க்ளையண்ட் கார்த்திக்-கின் ரிசப்ஷன் நேரம் என்ன?" அல்லது "நாளைய மேட்டர்னிட்டி ஷூட் எந்த லொகேஷனில் நடக்கிறது?" என்று Gemini-யிடம் கேட்டால் போதும்.
அது உங்களின் Notes-ஐப் படித்து, சரியான பதிலை நொடியில் திரையில் காட்டும். ஸ்க்ரோல் செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம்!
இதில் நேரடியாக Folder உருவாக்குவது போன்ற சில வசதிகள் இன்னும் வரவில்லை என்றாலும், இது நமக்கு மிச்சப்படுத்தும் நேரம் அளப்பரியது.
Samsung Galaxy போன் யூஸ் பண்ணும் போட்டோகிராபர்கள் உடனே இதை ட்ரை பண்ணிப் பாருங்கள்! உங்கள் வேலை பாதி குறைந்துவிடும்!
கருத்துகள் (0)
ஏற்றுகிறது...
