/
NFNEWSFELT
தமிழ்நாடு

லண்டனில் முதல்வர் விஜய் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்: | ₹12,300 கோடியில் தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்!

சுமார் 10,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.

Newsfelt Admin14 செப்டம்பர், 20265 நிமிட வாசிப்பு
பகிர்:

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலமைச்சர் விஜய் அவர்கள் அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளார். செப்டம்பர் 14, 2026 அன்று, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் ₹12,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், சுமார் 10,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.

முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு விவரங்கள்:

சம்வர்தனா மதர்சன் லிமிடெட் (Samvardhana Motherson):


ஐரோப்பிய மற்றும் பிரித்தானிய கிளை நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் வடிவமைப்பு (Design), பொறியியல், உற்பத்தி மற்றும் தளவாடங்கள் (Logistics) சார்ந்த கட்டமைப்புகளை நிறுவ ₹11,000 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சர்வதேசத் தகவல் தொடர்பு நிறுவனம் (Global Telecom Firm):


சென்னையின் புதிய 'ஜிசிசி காரிடார்' (Mount Poonamallee Road) பகுதியில் புதிய உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைக்க ₹1,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. Ernst & Young நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் மூலம் 2,000 உயர் ரக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group):


ஸ்வீடனைச் சேர்ந்த இந்நிறுவனம், தனது இந்தியக் கிளையான 'ஷ்ரியா சொல்யூஷன்ஸ்' மூலம் சென்னை மற்றும் திருச்சியில் தன் உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்கிறது. உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் (Embedded Systems) மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் துறைகளில் 600 பேருக்கு உயர் வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.

வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் (Wilson Power Solutions):


மின் சாதனங்கள் உற்பத்தித் துறையை வலுப்படுத்தும் நோக்கில், திருவள்ளூர் மாவட்டத்தில் ₹300 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 400 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டைத் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாற்றுவதற்கும், தென் மாவட்டங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் பரவலான வேலைவாய்ப்பை உறுதிசெய்வதற்கும் இந்த இலண்டன் பயணம் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இதுபற்றி முதல்வரின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

இங்கிலாந்து, இலண்டனில் இன்று (14.09.2026)அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இச்சந்திப்பில், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற 'வெற்றி' (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட ரூ. 2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து திரு. ஹிந்துஜா அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை விளக்கியதோடு, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாகக் காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, திருமதி நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India , London மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்