பெத்லகேம் குடும்ப யூனிட் | சிரிப்பும் சின்னச் சின்ன உணர்வுகளும்!
எளிய கதை + சிறந்த நடிப்பு + மென்சிரிப்பூட்டும் தருணங்கள் = குடும்பத்துடன் சங்கோஜமின்றிக் காண, ஒரு இயக்குநரின் படம். அதில் நன்கு நடிக்கத் தெரிந்த நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இந்தக் குடும்ப யூனிட் தரும் டானிக்!

மலையாள சினிமாவில் ‘பிரேமலு’ என்கிற ஃபீல் ரொமாண்டிக் காமெடி டிராமா படத்தின் மூலம் அவருடைய அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இந்த முறை, நிவின் - மமிதா இணையும் பெத்லஹேம் குடும்ப யூனிட் அவரது ஃபீல்குட் இனிமையைத் தொடர முயல்கிறது.
படத்தின் மையம் மிகவும் எளிமையானது – வயது வித்தியாசம் கொண்ட இருவரின் காதல் அரும்புதல், அதனைச் சுற்றிய குடும்பச் சூழல் ஆகியவற்றுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை சிறுகதைகள்போல் திரைக்கதையில் இணைக்க முயன்றுள்ளா கிரிஷ். இந்த இந்த எளிமைதான் தான் படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் மாறுகிறது. காரணம் திரைக்கதையின் நீரோட்டம் அங்கங்க நின்றுவிடுகிறது. எனினும் கேரள மண்ணுக்கே உரிய அந்த ஈரத்தின் சிலுசிலுப்பு நம் மனதை மென்மையாகத் தடவிக் கொடுக்க தவரவில்லை.
நிவின் பாலியின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம். அவரது இயல்பான காமெடி டைமிங் இந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்கிறது. அவருடைய இயல்பான டைமிங் சென்ஸை மிகவும் திறமையாக கையாள்கிறார். மமிதா பைஜுவுடனான அவருடைய கெமிஸ்ட்ரி படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளைத் தாங்குகிறது. இவர்கள் இருவரின் இணைப்பு தான் கதையை நம்பவும் வைக்கிறது.
இசை, ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் படத்தின் மனநிலையை அழகாக தாங்குகின்றன. ஒரு மென்மையான, குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பண்டிகை வைப் (ஓணம்), இந்தப் படத்தில் உள்ளது. மென்சிரிப்பை ஏற்படுத்தும் பல தருணங்களும் உள்ளன. இதனால் இதை ஒரு ஒரு wholesome entertainer என்றால் அது சரியாக இருக்கும்.
திரைக்கதை அளவில் சில இடங்களில் தெரியும் தளர்வு காரணமாக, கதையை ஒட்டி அமைக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருந்தாலும், அதை ஒரு ஈர்ப்பான காதல் பயணமாக மாற்ற வேண்டிய திரைக்கதையின் பிடிமானம் தளந்துவிடுகிறது. இதனால், சில இடங்களில் படத்தை நீங்கள் நீளமாக உணரலாம். இயக்குநரின் முந்தைய படங்களில் இருந்த அந்த இளமையின் துறுதுறுப்பு முழுமையாக வெளிப்படவில்லை என்றாலும் இயக்குநர் கிரிஷ் ஏமாற்றவில்லை என்பது உண்மை.
மொத்தத்தில், ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ ஒரு பெரிய கதை சொல்லும் முயற்சி என்று கூற முடியாது. அது ஒரு வாழ்க்கையின் சில தருணங்களை ஒரு சுவையான கேக் துண்டாக உங்களுக்கு நீட்டுகிறது. குடும்பத்துடன் சிரித்துக் கொண்டு பார்க்கும் ஒரு சினிமா. மனதில் நீண்டநேரம் நிற்கும் அளவுக்கான ஆழமோ, திரைக்கதை வலிமையோ எதிர்பார்த்து இப்படத்தைக் காண நினைக்காதீர்கள்.
எளிய கதை + சிறந்த நடிப்பு + மென்சிரிப்பூட்டும் தருணங்கள் = குடும்பத்துடன் சங்கோஜமின்றிக் காண, ஒரு இயக்குநரின் படம். அதில் நன்கு நடிக்கத் தெரிந்த நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இந்தக் குடும்ப யூனிட் தரும் டானிக்!
மதிப்பீடு 2.9 /5
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…


.jpg%3F2026-08-22T18%253A10%253A11.797Z&w=3840&q=90&dpl=dpl_3yCGxadKjWnaSmyWihqCurbKM8Fu)
