சென்னையின் ஒரே பெரிய வண்ணத்துப்பூச்சிப் பூங்கா!
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாக விரிந்துள்ள இப்பூங்கா, வண்ணத்துப்பூச்சிகளின் இயற்கை வாழிடத்திற்குஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
-900x506.webp%3F2026-08-30T08%253A41%253A40.091Z&w=3840&q=75&dpl=dpl_3yCGxadKjWnaSmyWihqCurbKM8Fu)
இயற்கையின் வண்ணக் கோலங்களை அருகில் கண்டு ரசிக்க விரும்பும் சென்னைவாசிகளுக்கு மேலும் ஒரு சிறப்பான பரிசாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சிப் பூங்கா மேம்படுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் அனுபவத்தை முழுமையாக மாற்றுவதோடு, வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வியலை நுட்பமாகப் புரிந்துகொள்ளும் வகையில் இப்பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களும் கட்டமைப்பும்
ஒட்டேரி ஏரிக்கு அருகே சுமார் 2.7 ஹெக்டேர் பரப்பளவில் வண்டலூர் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாக விரிந்துள்ள இப்பூங்கா, வண்ணத்துப்பூச்சிகளின் இயற்கை வாழிடத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கம்பளிப்புழு வடிவ அரங்கம்: பூங்காவின் தனித்துவமான சிறப்பம்சமாக, கம்பளிப்புழு வடிவில் உருவாக்கப்பட்ட உட்புற வண்ணத்துப்பூச்சி பாதுகாப்புக் கூடம் திகழ்கிறது. இதன் உள்ளே புழு மற்றும் கூட்டுப்புழு வளர்ப்பு அறைகளும், வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியை விளக்கும் மையமும் செயல்படுகின்றன.
.jpg%3F2026-08-30T08%253A41%253A07.001Z&w=3840&q=90&dpl=dpl_3yCGxadKjWnaSmyWihqCurbKM8Fu)
நவீன வசதிகள்
பாதுகாப்புக் கூடத்தில் புதிய பாலிகார்பனேட் தாள்களும், கவர்ச்சிகரமான வண்ண ஒளி அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன. துருப்பிடிக்காத எஃகு வலைகள் மற்றும் சுற்றுப்புறத்தோடு இயைந்த மூங்கில் கைப்பிடிகள் அமைக்கப்பட்டு பூங்காவின் பாதுகாப்பும் அழகும் உயர்த்தப்பட்டுள்ளது.
சுயக் கற்றல் கியாஸ்க்கள்: மேம்படுத்தப்பட்ட விளக்க மையத்தில் நவீன காட்சிப்படுத்தல்களுடன் சுயக் கற்றல் கியாஸ்க்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்கள் பல்வேறு வண்ணத்துப்பூச்சி இனங்கள் குறித்து அறிந்துகொள்வதோடு, தங்களது சொந்த மெய்நிகர் வண்ணத்துப்பூச்சிகளை வடிவமைக்கும் புதுமையான வசதியையும் பெறலாம்.
.jpg%3F2026-08-30T08%253A42%253A11.216Z&w=3840&q=90&dpl=dpl_3yCGxadKjWnaSmyWihqCurbKM8Fu)
கண்கவர் கலை நயம்
பூங்கா முழுவதும் வண்ணத்துப்பூச்சிகளைப் பிரதிபலிக்கும் தத்ரூபமான சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், குடும்பத்தினருடன் சென்று தங்களது நினைவுகளைப் புகைப்படமாகப் பதிவு செய்ய இரண்டு புதிய சிறப்புப் புகைப்பட இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தேன் வழங்கும் மலர்த் தோட்டங்களும், ஊட்டுத் தாவரங்களும் நிறைந்த இப்பூங்கா, குழந்தைகளின் கல்விசார் சுற்றுலாவிற்கும் இயற்கையை நேசிப்பவர்களுக்கும் ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…



