/
NFNEWSFELT
சினிமா

தமிழ்ப் படங்கள் தான் எனக்கு பைபிள்! | 'தி பாரடைஸ்’ நாயகன் நானி உணர்ச்சிகர உரை!

என்னுடைய சினிமா அறிவிற்கும் என்னுடைய சினிமா மீதான ஆர்வத்திற்கும் என்னுடைய சினிமா மீதான காதலுக்கும்  சினிமா மீது பிரியம் வந்ததற்கும் தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் தான் இன்ஸ்பிரேஷன்

Newsfelt Admin17 செப்டம்பர், 20264 நிமிட வாசிப்பு
பகிர்:

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'தி பாரடைஸ்'. அந்தப் படத்தின் ஊடகச் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா- படத்தின் நாயகன் நடிகர் 'நேச்சுரல் ஸ்டார்' நானி - திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். இவர்களுடன் ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் வந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சி. ஹெச். சாய் ஒளிப்பதிவையும்  அனிருத் இசையமைப்பையும் கையாண்டிருக்கிறார்கள்.  வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிறது. 

சில தினங்கள் முன் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் நானி


நடிகர் நானி பேசுகையில், '' நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தெரியும். நான் உங்களைப் போன்ற ஒரு நல்லதொரு பார்வையாளன். ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது போன்றதொரு திரைப்படங்கள் வெளியாவது குறைவு. அப்படி ஒரு பிரம்மாண்டமான மாஸான திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம் தான் 'தி பாரடைஸ்'.

ஒவ்வொரு ரசிகர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை.‌ இந்தப் படம் அப்படிப்பட்ட ஒன்று. இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இதனை நீங்கள் 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்த படத்தை பார்த்த பிறகு சொல்வீர்கள்.‌ இந்த படத்தில் அழுத்தமான எமோஷன்களை பற்றி பேசி இருக்கிறோம். அதே தருணத்தில் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கும் அற்புதமான அனுபவங்களையும் வழங்கி இருக்கிறோம். தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவிற்கும் என்னுடைய சினிமா மீதான ஆர்வத்திற்கும் என்னுடைய சினிமா மீதான காதலுக்கும்  சினிமா மீது பிரியம் வந்ததற்கும் தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் தான் இன்ஸ்பிரேஷன். அதிலும் கமல்ஹாசன்- மணிரத்னம்- பாக்கியராஜ்- பாரதிராஜா- என பல சாதனையாளர்களை குறிப்பிடலாம். நான் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வருகை தரும் போதெல்லாம் என்னுடைய திரை குடும்பத்திற்கு வந்தது போன்று உணர்வு எழும். எனக்கும், கடந்த காலத்தில் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. என் மீது தமிழ் ரசிகர்கள் மட்டும் அன்பும் அதிகம். அதனை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய படத்திற்கு தமிழில் பின்னணி குரலில் பேசுவதற்கு தமிழ் ரசிகர்கள் மீதான பேரன்பு தான் காரணம். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் 'தி பாரடைஸ்'.  என்னுடைய திரையுலக பயணத்தில் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுதான்.‌

நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் 24ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது. அடுத்த முறை நான் என்னுடைய படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் என்னை 'தி பாரடைஸ்' படத்தில் நடித்திருக்கும் 'ஜடல்' என்ற கேரக்டர் பெயரை சொல்லித்தான் அழைப்பீர்கள்'' என்றார்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீகாந்த் வோடேலா பேசுகையில், ''எனக்கு தமிழ் தெரியாது. அடுத்த படத்தில் தமிழைக் கற்றுக்கொண்டு பேசுகிறேன். இந்த திரைப்படம் தாயை பற்றியும் புரட்சியைப் பற்றியும்... பேசும்” என்றார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா- நடிகர் நானி ஆகியோர் பதிலளித்தனர். அத்துடன் சென்னையில் உள்ள நானியின் ரசிகர்களுக்காக 'தி பாரடைஸ்' படத்திற்கான பிரத்யேக காட்சிக்குரிய முதல் டிக்கெட்டையும் நானி அறிமுகப்படுத்தினார்.

‘தி பாரடைஸ்’ பட முன் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா நாயகன் நானி, 'திங்க் ஸ்டுடியோஸ்' ஸ்வரூப் ரெட்டி ஆகியோர்.
பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்