/
NFNEWSFELT
சினிமா

பழங்குடிப் பெண்ணாக ரஷ்மிகாவின் 'மைசா' டீசர்!

ரஷ்மிகாவை கியூட்டாகவும், சாஃப்ட் கேரக்டர்களிலும்தான் பார்த்திருக்கிறோம். ரத்தமும் சதையுமான மைசா ஆக்‌ஷன் லுக் மிரட்டலாக இருக்கிறது.

Newsfelt Admin20 செப்டம்பர், 20263 நிமிட வாசிப்பு
பகிர்:

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மிக அதிகமாக வாழும் 'கோண்டு' (Gond) இன பழங்குடி மக்களின் வாழ்வியலையும் போராட்டத்தையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள பான்-இந்தியத் திரைப்படம் 'மைசா' (Mysaa). அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்துப் பீரியட் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தின் அதிரடியான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.


இந்தப் படத்தில் நேஷனல் க்ரஷ் ரஷ்மிகா மந்தனா, கோண்டு இன பழங்குடிப் பெண்ணாக முற்றிலும் மாறுபட்ட, முரட்டுத்தனமான ஆக்‌ஷன் அவதாரத்தில் நடித்துள்ளார். படம் வருகிற நவம்பர் 27-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டீசர் என்ன சொல்கிறது?

டீசரின் தொடக்கத்தில் வரும் ரஷ்மிகாவின் குரல் மற்றும் காட்சி அமைப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. குறிப்பாக, தண்ணீருக்கு அடியில் ரஷ்மிகா மந்தனா அரிவாளுடன் அமர்ந்திருக்கும் அண்டர்வாட்டர் (Underwater) காட்சிகள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் (Goosebumps) வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்தப் படத்திற்காக ரஷ்மிகா டூப் போடாமல் கடுமையான சண்டைக் காட்சிகளில் நடித்து, இடுப்பில் பலத்த காயமடைந்தும் கூட அர்ப்பணிப்புடன் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜேக்ஸ் பிஜாயின் மிரட்டலான பின்னணி இசையும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் டீசரின் தீவிரத்தன்மையை (Intensity) அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளன. சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம் மற்றும் தாரக் பொன்னப்பா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இணையத்தில் ரசிகர்களின் கமெண்ட்டுகள்

'மைசா' டீசர் வெளியானது முதல் சமூக வலைத்தளங்களான எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் ரஷ்மிகாவின் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
"இது வேற லெவல் ரஷ்மிகா!": "இதுவரை ரஷ்மிகாவை கியூட்டாகவும், சாஃப்ட் கேரக்டர்களிலும்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த ரத்தமும் சதையுமான முரட்டுத்தனமான ஆக்‌ஷன் லுக் மிரட்டலாக இருக்கிறது. 'மைசா' அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும்" என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

"ஹாலிவுட் தரத்தில் அண்டர்வாட்டர் காட்சிகள்": படத்தின் டீசரில் வரும் அந்த அண்டர்வாட்டர் ஃபைட் மற்றும் விஷுவல்கள் (Visuals) அசாத்தியமாக உள்ளது என்றும், ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் பிஜிஎம்-மும் (BGM) திரையரங்குகளில் தீப்பற்ற வைக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
"கோண்டு பழங்குடியினப் பெண் வேடத்திற்கு கச்சிதம்": இந்தியாவின் பூர்வகுடி மக்களின் ஆவேசத்தையும், மண்ணிற்கான போராட்டத்தையும் ரஷ்மிகாவின் கண்கள் அப்படியே கடத்துகின்றன எனப் பாராட்டி வருகின்றனர்.

பான் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் 'மைசா' படத்தின் டீசர், நவம்பர் 27 ரிலீஸை நோக்கி ரசிகர்களை இப்போதே ஆவலுடன் காக்க வைத்துள்ளது.

மைசா படத்தின் டீசரைக் காணா இந்த இணைப்பில் செல்லுங்கள்

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்